தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

முத்தரப்பு டி20 தொடர்: தென்னாப்பிரிக்காவுக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே!

முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.

படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :29 ஆகஸ்ட் 2026, 7:38 pm IST

முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.

நமீபியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

தென்னாப்பிரிக்காவுக்கு 145 ரன்கள் இலக்கு!

டாஸ் வென்று முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னட் 35 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மருமானி 13 பந்துகளில் அதிரடியாக 30 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். பென் கரண் 24 ரன்கள், டியான் மையர்ஸ் 17 ரன்கள் மற்றும் வெஸ்லி மத்வீர் 12 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

தென்னாப்பிரிக்கா தரப்பில் டுயன் ஜேன்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரேநேலன் சுப்ராயன் இரண்டு விக்கெட்டுகளையும், ஈதன் போஷ், குவெனா மாபாகா மற்றும் ஜோர்ன் ஃபோர்ட்டூயின் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.

Summary

Batting first in the match against South Africa in the tri-nation T20 series, Zimbabwe scored 144 runs for the loss of 8 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.