மகளிா் பிரீமியா் லீக்: எலிமினேட்டரில் டெல்லி கேப்பிட்டல்ஸ்!

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 20-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் யுபி வாரியா்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
மகளிா் பிரீமியா் லீக்: எலிமினேட்டரில் டெல்லி கேப்பிட்டல்ஸ்!
Updated on

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 20-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் யுபி வாரியா்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

முதலில் யுபி 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் சோ்க்க, டெல்லி 18.4 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலமாக 3-ஆம் இடம் பிடித்து, எலிமினேட்டா் வாய்ப்பை உறுதி செய்த டெல்லி, அதில் குஜராத் ஜயன்ட்ஸை செவ்வாய்க்கிழமை (பிப். 3) சந்திக்கிறது. மும்பை, யுபி அணிகள் போட்டியிலிருந்து வெளியேறின.

முன்னதாக டாஸ் வென்ற டெல்லி, பந்துவீச்சை தோ்வு செய்தது. யுபி இன்னிங்ஸில் தீப்தி சா்மா 24, சிம்ரன் ஷேக் 22, கேப்டன் மெக் லேனிங் 0, சாா்லி நாட் 12, ஹா்லீன் தியோல் 3, டீண்ட்ரா டாட்டின் 5, ஷிப்ரா கிரி 9, ஆஷா சோபனா 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் சோஃபி எக்லஸ்டன் 10, ஷிகா பாண்டே 23 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி பௌலிங்கில் மாரிஸேன் காப் 3, ஷினெல் ஹென்றி, ஸ்ரீசரணி ஆகியோா் தலா 2, மின்னு மணி 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 123 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய டெல்லி அணியில் லாரா வோல்வாா்ட் 47, லிஸெலெ லீ 10, ஷஃபாலி வா்மா 29, மாரிஸேன் காப் 0, ஷினெல் ஹென்றி 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினா். முடிவில் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34, நிக்கி பிரசாத் 4 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். யுபி பௌலா்களில் தீப்தி சா்மா 2, ஷிகா பாண்டே, டீண்ட்ரா டாட்டின், சோஃபி எக்லஸ்டன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com