சிட்னி டெஸ்ட்டில் ஸ்டீவ் ஸ்மித் செய்த சேட்டைகள்!

சிட்னி டெஸ்ட்டில் ஸ்டீவ் ஸ்மித் செய்த வேடிக்கையான செயல்கள் குறித்து...
Steve Smith's antics in the Sydney Test...
சிட்னி டெஸ்ட்டில் ஸ்டீவ் ஸ்மித் செய்த சேட்டைகள்...படங்கள்: ஏபி, இன்ஸ்டா/ ஸ்டீவ் ஸ்மித்.
Updated on
1 min read

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்: சிட்னி டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் செய்த வேடிக்கையான செயல்கள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

கடைசி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் கடந்த ஜன.4 முதல் சிட்னியில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 384 ரன்களுக்கு ஆல்-அவுட்டாக, ஆஸி. தனது முதல் இன்னிங்ஸில் மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 518/7 ரன்கள் எடுத்துள்ளது.

பந்தினை அடிக்காமல் விடும்போது ஒவ்வொரு முறையும் பந்து எப்படி சென்றது என்பதைக் குறித்து ஸ்மித் அப்போதே சொல்லிவிடுவார். இது அவரது வழக்கம்.

சில சமயங்களில் அவரே பந்துவீச்சாளரைப் பாராட்டுவார். சில சமயங்களில் நடுவருக்கு முன்பாக அவரே ஒயிட் கொடுத்துவிடுவார்.

நடனம் ஆடுவதுபோல் செய்வார். இந்த முறை இவற்றுடன் எல்லாம் சேர்த்து ஒருபடி மேலேச் சென்று கீழே விழுந்து தலைக்குப்புற பல்டி அடித்தார். இது மிகுந்த கவனம் ஈர்த்து வருகிறது.

இந்தப் போட்டியில் ஸ்மித் தனது 37-ஆவது சதத்தை நிறைவு செய்தார்.

சர்வதேச போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஸ்மித் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆஷஸ் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஸ்மித் இரண்டாமிடம் வகிக்கிறார்.

Summary

The funny antics of Australian captain Steve Smith in the Sydney Test are greatly entertaining the spectators.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com