

பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர் அணியைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் 107 மீட்டருக்கு சிக்ஸர் அடித்து அசத்தியுள்ளார்.
சிட்னி தண்டர் அணி நிர்ணயித்த 190 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணியில் கேப்டன் டேவிட் வார்னட் சதம் (110*) அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தத் தொடரிலிருந்து சிட்னி தண்டர் அணி வெளியேறினாலும் சிட்னி சிக்ஸர் அணியின் பிளே ஆப்ஸ் நம்பிக்கையை தடுக்கும் வாய்ப்பிருக்கிறது.
இந்தப் போட்டியில் நாதன் மெக்ஆண்ட்ரூ வீசிய 3.3 ஆவது பந்தில் ஸ்டீவ் ஸ்மித் 107 மீட்டருக்கு லெக் ஸைடில் சிக்ஸர் அடித்து அசத்தினார்.
அந்தப் பந்து திடலின் உச்சிக்குச் சென்று தடுப்பில் மோதி கீழே விழுந்தது.
இந்தப் போட்டியில் வென்றால் சிட்னி சிக்ஸர் அணி பிளே ஆப்ஸ் செல்லும் வாய்ப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, சிட்னி சிக்ஸர் அணி 9 ஓவர்கள் முடிவில் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்துள்ளது.
பாபர் அசாம் 37, ஸ்டீவ் ஸ்மித் 55 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்கள். பந்துவீச்சில் சாம் கரண் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.