

காயம் காரணமாக மகளிர் பிரீமியர் லீக் தொடரிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி வீராங்கனை கமலினி விலகியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனையான கமலினி நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த 5 போட்டிகளில் 4 போட்டிகளில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய அவர், 75 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில், காயம் காரணமாக மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து கமலினி விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
காயம் காரணமாக விலகியுள்ள கமலினிக்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியில் சுழற்பந்துவீச்சாளர் வைஷ்ணவி சர்மா மாற்று வீராங்கனையாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மகளிர் பிரீமியர் லீக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வைஷ்ணவி சர்மா ரூ. 30 லட்சத்துக்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வைஷ்ணவி சர்மா, கடந்த டிசம்பரில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
இடதுகை சுழற்பந்துவீச்சாளரான வைஷ்ணவி சர்மா இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.