

டபிள்யுபிஎல் தொடரின் ஒருபகுதியாக மும்பை இண்டியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டில்லி கேபிட்டல்ஸ் அணி.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குஜராத் மாநிலம் வதோதராவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற டில்லி பெளலிங்கை தேர்வு செய்ய மும்பை தரப்பில் சஜீவன் சஞ்சனா-ஹெய்லி மேத்யூஸ் தொடக்க பேட்டர்களாக களமிறங்கினர். ஆனால் சஜீவனா 9, ஹெய்லி 12 என சொற்ப ரன்களுடன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.
இதனால் தடுமாறிய நிலையில் நடாலி ஷிவர்=கேப்டன் ஹர்மன்ப்ரீத் இணை நிலையாக ஆடி மீட்டது.
ஹர்மன்ப்ரீத் கெளர் 7 பவுண்டரியுடன் 33 பந்துகளில் 41 ரன்களை விளாசி ஸ்ரீ சரணி பந்துவீச்சில் லூஸி ஹாமில்டனிடம் கேட்ச் தந்தார்.
நிக்கோலா கரே 12, அமன்ஜோத்கெüர் 3 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர்.
நடாலி ஷிவர் அதிரடி 65: மறுமுனையில் 2 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 65 ரன்களை விளாசி இறுதி வரை களத்தில் நின்றார் ஆல்ரவுண்டர் நடாலி ஷிவர்.
மும்பை 154/5: நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இண்டியன்ஸ் 154/5 ரன்களைக் குவித்தது. பெüலிங்கில் டில்லி தரப்பில் ஸ்ரீசரணி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டில்லி கேபிட்டல்ஸ் 155/3 வெற்றி: 155 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய டில்லி அணியில் ஷஃபாலி 29, லிஸ்லே லீ 46 ரன்களை விளாசி அவுட்டாயினர். லாரா வொல்வர்ட் 17 ரன்களுடன் ரன் அவுட்டானார்.
கேப்டன் ஜெமீமா ரோட்ரிக்ஸ் அபாரமாக ஆடி 1 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 37 பந்துகளில் 51 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.
மாரிúஸன் கேப் 10 ரன்களுடன் களத்தில் நிற்க 19 ஓவர்களில் டில்லி அணி 155/3 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது.
பெüலிங்கில் மும்பை தரப்பில் அமன்ஜோத், வைஷ்ணவி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.