

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தது.
நாக்பூரில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக, அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 22 பந்தில் தனது ஏழாவது அரைசதத்தை நிறைவு செய்தார்.
சதம் அடிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அபிஷேக் சர்மா 84 ரன்களில் (35 பந்துகள்) ஆட்டமிழந்தார்.
ரிங்கு சிங், சூர்யகுமார், ஹார்திக் பாண்டியா அவர்களின் பங்கிற்கு தலா 44*, 32, 25 ரன்கள் அடித்தார்கள்.
நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டஃபி, கைல் ஜேமிசன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
டேரில் மிட்செல் வீசிய கடைசி ஓவரில் ரிங்கு சிங் 21 ரன்கள் அடித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.