பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

யு19 உலகக் கோப்பை: ஜுவெல் ஆண்ட்ரூ அரைசதம்; மே.இ.தீவுகள் 226 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 226 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image
- படம் | ஐசிசி
Updated On :25 ஜனவரி 2026, 12:14 pm

இணையதளச் செய்திப் பிரிவு

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 226 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பைத் தொடரின் இன்றையப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

ஜுவெல் ஆண்ட்ரூ அரைசதம்

டாஸ் வென்று முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 46.5 ஓவர்களில் 226 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜுவெல் ஆண்ட்ரூ அதிகபட்சமாக 82 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜோனதன் மற்றும் ஆடியன் ரச்சா தலா 28 ரன்களும், தனேஷ் பிரான்சிஸ் 19 ரன்களும் எடுத்தனர்.

அயர்லாந்து தரப்பில் ரூபென் வில்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். லூக் முர்ரே மற்றும் ஜேம்ஸ் வெஸ்ட் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஆலிவர் ரைலி, தாமஸ் ஃபோர்டு தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.