

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று (ஜனவரி 31) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான இந்த டி20 தொடர் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சனுக்கு சிறப்பானதாக அமையவில்லை. முதல் 4 போட்டிகளில் சோபிக்காத நிலையில், இன்றையப் போட்டியில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், சஞ்சு சாம்சன் இன்றையப் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பெற்றார்.
முதல் நான்கு போட்டிகளில் சரியாக விளையாடாத நிலையில், இன்றையப் போட்டியில் சஞ்சு சாம்சன் நன்றாக விளையாடி ரன்கள் குவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சஞ்சு சாம்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.
முதல் நான்கு போட்டிகளிலும் பிளேயிங் லெவனில் இடம்பெற்று தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய அவர் 10, 6, 0 மற்றும் 24 ரன்கள் முறையே எடுத்தார். இன்றையப் போட்டியிலும் அவர் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். இந்த தொடரில் 5 போட்டிகளிலும் விளையாடிய சஞ்சு சாம்சன், மொத்தமாக வெறும் 46 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இன்னும் ஒரு வாரத்தில் டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், சஞ்சு சாம்சனின் ஃபார்ம் இந்திய அணிக்கு கவலையளிப்பதாக உள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இஷான் கிஷன் அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வேண்டும் எனவும், அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட வேண்டும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்றையப் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாடி வரும் இஷான் கிஷன் 35 பந்துகளில் 82* ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவாரா? அல்லது இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவாரா? என்பது அணி நிர்வாகம் எடுக்கும் முடிவிலேயே உள்ளது. இந்திய அணி நிர்வாகம் என்ன முடிவெடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.