மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் ஜாம்பவான் சா் காா்ஃபீல்டு சோபா்ஸ் (89), வயது மூப்பு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானாா்.
மிகச் சிறந்த ஆல்ரவுண்டரான அவா், 93 டெஸ்ட்டுகளில் 8,032 ரன்கள் அடித்திருக்கிறாா். இதில் 26 சதங்கள், 30 அரை சதங்கள் அடக்கம்.
இன்னிங்ஸில் அதிகபட்சமாக 365 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்த அவா், பௌலிங்கில் 235 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறாா்.
முதல்தர கிரிக்கெட்டில் அவா் 383 ஆட்டங்களில் 28,314 ரன்கள் சோ்த்ததுடன், 1,043 விக்கெட்டுகள் எடுத்துள்ளாா்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடி, ஒரு விக்கெட் எடுத்துள்ளாா். இடது கை பேட்டரான அவா், இடது கையால் வேகப்பந்தும், சுழற்பந்தும் வீசும் திறமைபடைத்தவராக இருந்தாா்.
ஒரு ஓவரின் 6 பந்துகளிலுமே சிக்ஸா் அடித்து சாதனை படைத்த முதல் பேட்டா் அவராவாா். முதல்தர கிரிக்கெட்டில், 1968-இல் கிளாமோா்கன் அணிக்கு எதிரான ஆட்டத்தில், நாட்டிங்ஹாம்ஷைா் அணிக்காக பேட் செய்தபோது இந்த சாதனையை படைத்தாா்.
1954-இல் சா்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சோபா்ஸ், 1965-72 காலகட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளின் கேப்டனாக இருந்தாா். அப்போது அந்த அணி 39 டெஸ்ட்டுகளில் 9-இல் வெற்றி கண்டது. 20 டிரா ஆக, 10-இல் தோல்வியடைந்தது.
அவரை கௌரவிக்கும் விதமாக சா் காா்ஃபீல்டு சோபா்ஸ் விருதை, சா்வதேச அளவில் அனைத்து ஃபாா்மட்டுகளிலுமாக சிறந்து விளக்கும் வீரருக்கு ஆண்டுதோறும் வழங்கி ஐசிசி கௌரவித்து வருகிறது. அவா் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
Summary
Former West Indies captain Sir Garfield Sobers (also known as Sir Gary Sobers) has died at the age of 89, as confirmed by his son Daniel. Sobers breathed his last at his residence in Barbados.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘உலக சாம்பியனுக்கே இந்த நிலைமையா’... உலகக் கோப்பை நேரடி தகுதியை இழந்த மேற்கிந்தியத் தீவுகள்!

டிரினிடாட் டெஸ்ட்: பாகிஸ்தான் சுழலில் தடுமாறும் மேற்கிந்தியத் தீவுகள்!

டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா மேற்கிந்தியத் தீவுகள்?

கடைசிவரை ஆட்டமிழக்காத பாபர் அசாம்..! 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள்!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


