6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சச்சின், கோலியைக் காட்டிலும் சூர்யவன்ஷி மிகப் பெரிய சாதனைகள் படைப்பார்: டேல் ஸ்டெயின்

சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியைக் காட்டிலும் வைபவ் சூர்யவன்ஷி மிகப் பெரிய சாதனைகள் படைப்பார் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

Vaibhav Suryavanshi

வைபவ் சூர்யவன்ஷி - படம் | ANI

Published On :

சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியைக் காட்டிலும் வைபவ் சூர்யவன்ஷி மிகப் பெரிய சாதனைகள் படைப்பார் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடியில் மிரட்டினார். சர்வதேச வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகவும் அதிரடியாக விளையாடிய அவர், அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்ச் தொப்பியை வென்றார். டி20 தொடர்களுக்கான தேசிய அணியிலும் அவர் இடம்பிடித்துள்ளார்.

இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷி அவரது கிரிக்கெட் பயணத்தின் முடிவில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியைக் காட்டிலும் மிகப் பெரிய சாதனைகள் படைத்திருப்பார் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சூர்யவன்ஷி மிகவும் வித்தியாசமான வீரர். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் வீரர்களைக் காட்டிலும் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்திருக்கும் புதையல். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்று வைபவ் சூர்யவன்ஷியும் சாதனைகள் படைக்க காத்திருக்கிறார். சூர்யவன்ஷி அவரது கிரிக்கெட் பயணத்தின் முடிவில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியின் சாதனைகளைக் காட்டிலும் பலமடங்கு சாதனைகள் படைத்திருப்பார். அவரைப் போட்டிகளில் எப்படி விளையாடி வைக்கப் போகிறார்கள் என்பது மிகவும் முக்கியம் என்றார்.

ஐபிஎல் தொடரில் அதிரடியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் எவ்வாறு விளையாடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Summary

Former South African pacer Dale Steyn has made a bold prediction that wonder kid Vaibhav Sooryavanshi is going to achieve far bigger things than stalwarts Sachin Tendulkar and Virat Kohli.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.