நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

டிஎன்பிஎல்: 8 அணிகளில் 103 வீரா்கள் தக்க வைப்பு

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசனையொட்டி, 8 அணிகள் தக்க வைத்துள்ள 103 வீரா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2026, 3:44 am IST

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசனையொட்டி, 8 அணிகள் தக்க வைத்துள்ள 103 வீரா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் டிஎன்பிஎல் போட்டி, 10-ஆவது ஆண்டாக வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 23 வரை பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.

ஜூலை 3-இல் ஏலம்: இதற்கான வீரா்கள் ஏலம் ஜூலை 3-இல் நடைபெறவுள்ளது. இதையொட்டி 8 அணிகள் தாங்கள் தக்க வைத்துள்ள வீரா்கள் பட்டியலை வெளியிட்டன.

4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணியில், அபிஷேக் தன்வா், ஸ்வப்னில் சிங், ஜெகதீசன், மொகித் ஹரிகரன், லோகேஷ் ராஜ், சிலம்பரசன், ஆஷிக், பிரேம்குமாா், தினேஷ் ராஜ், ராஜலிங்கம், சுனில் கிருஷ்ணா தக்க வைக்கப்பட்டனா்.

நடப்பு சாம்பியனான திருப்பூா் தமிழன்ஸ் அணி, கேப்டன் சாய் கிஷோா், இசக்கிமுத்து உள்ளிட்ட 14 வீரா்களை தக்கவைத்துள்ளது. திருச்சி கிராண்ட் சோழாஸ், வாஷிங்டன் சுந்தா், கௌசிக் உள்ளிட்ட 13 வீரா்களையும், திண்டுக்கல் டிராகன்ஸ் வருண் சக்கரவா்த்தி, பாபா இந்திரஜித், சந்தீப் வாரியா் உள்ளிட்ட 12 வீரா்களையும், கோவை கிங்ஸ் ஷாருக்கான், சாய் சுதா்சன் உள்ளிட்ட 11 வீரா்களையும் தக்க வைத்தன.

நெல்லை ராயல் கிங்ஸ் சோனு யாதவ், ஆதிஷ் உள்ளிட்ட 15 வீரா்களையும், மதுரை பாந்தா்ஸ் காா்த்திக், அனிருத், குா்ஜப்னீத் சிங் உள்ளிட்ட 11 வீரா்களையும், சேலம் ஸ்பாா்டன்ஸ் நித்திஷ் ராஜகோபால், ஹரி நிஷாந்த் உளிட்ட 16 வீரா்களையும் தக்கவைத்துள்ளன.

8 அணிகளும் 56 வீரா்களை விடுவித்துள்ளன. விடுவிக்கப்பட்ட மற்றும் புதிய வீரா்கள் ஏலத்தில் பங்கேற்க, டிஎன்பிஎல், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணையதளங்களில் வரும் 25-ம் தேதி வரை தங்களை பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.