மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 98 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் பிரிஸ்டாலில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை அணி முதலில் பேட் செய்தது.
முதலில் விளையாடிய இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக நிலாக்ஷிகா சில்வா 30 ரன்களும், கவிஷா தில்ஹாரி 21 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, இமேஷா துலானி மற்றும் காவ்யா கவிந்தி தலா 17 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கரிஷ்மா ராம்ஹரக் இரண்டு விக்கெட்டுகளையும், சின்னெல்லே ஹென்றி, எஃபி ஃபிளெட்ச்சர், ஆலியா மற்றும் அஷ்மினி முனிசர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடி வருகிறது.
Summary
Batting first in the match against the West Indies at the Women's T20 World Cup, the Sri Lankan team was bowled out for 98 runs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றி..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!

டி20 உலகக் கோப்பை: இலங்கைக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து!
ஹோல்டர் ஆட்ட நாயகன்: இலங்கையை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!

டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies





