டி20 உலகக் கோப்பையுடன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஹனுமன் கோயிலுக்குச் சென்ற ஐசிசி தலைவர் ஜெய் ஷா சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.
அவருடன் இந்திய அணி பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் சென்றனர்.
ஐசிசி டி20 ஆடவா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 255 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 159 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணி, மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், அகமதாபாத்தில் உள்ள ஹனுமன் கோயிலுக்கு நள்ளிரவு 1.20 மணியளவில் கோப்பையுடன் சென்ற ஜெய் ஷா, கெளதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர்.
Summary
Jay Shah went to the temple at midnight with the T20 World Cup!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்கும்..! ஃபிஃபா தலைவர் உறுதி!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


