ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃபியை இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் நேற்று (மார்ச் 28) தொடங்கியது. தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றி பெற்றது.
மிகவும் அதிரடியாக விளையாடக் கூடிய பேட்டர்களான அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டுகளை ஐபிஎல் தொடரில் தான் விளையாடிய அறிமுகப் போட்டியிலேயே வீழ்த்தி அசத்தினார் ஆர்சிபி வேகப் பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃபி. அதுமட்டுமின்றி, அவர் வீசிய அடுத்த ஓவரிலேயே நிதீஷ் குமார் ரெட்டியின் விக்கெட்டினையும் வீழ்த்தினார். 4 ஓவர்கள் வீசிய ஜேக்கப் டஃபி 22 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)
இந்த நிலையில், அறிமுகப் போட்டியிலேயே அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேக்கப் டஃபியை இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் ஏலத்தில் ஜேக்கப் டஃபியை ஆர்சிபி வாங்கும்போது, அவர் ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு சிறந்த மாற்று வீரராக இருப்பார் என முதல் நபராக நான் தான் கூறினேன் என நினைக்கிறேன். அப்போது அவர் டி20 போட்டிகளில் நம்பர்.1 வேகப் பந்துவீச்சாளராக இருந்தார். டெஸ்ட் போட்டி ஒன்றில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். நியூசிலாந்து அணிக்காக அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
ஜேக்ப்ப டஃபியின் தனித்துவம் என்னவென்றால், அவரால் இரண்டு விதமாகவும் பந்தினை ஸ்விங் செய்ய முடியும். ஆனால், அபிஷேக் சர்மாவுக்கு எதிராக அவர் அதனை முயற்சிக்கவில்லை. திட்டங்கள் வகுப்பதில் ஆர்சிபி சிறந்த அணி. அந்த அணியின் திட்டங்களை ஜேக்கப் டஃபி மிகவும் அழகாக செயல்படுத்தினார். சன்ரைசர்ஸ் அணி ஆட்டத்தின் தொடக்கத்தில் ரன்கள் குவிக்காமல் இருப்பதை அவர் உறுதி செய்தார் என்றார்.
அறிமுகப் போட்டியிலேயே அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேக்கப் டஃபிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Former Indian cricketer Ravichandran Ashwin has praised Royal Challengers Bangalore fast bowler Jacob Duffy.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திலக் வர்மா அரைசதம்; ஆர்சிபிக்கு 167 ரன்கள் இலக்கு!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை


