இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்கேரளத்தில் காங்கிரஸ் வெல்லும்; நாளை பிற்பகலுக்குள் வெற்றி உறுதியாகிவிடும் - சசிதரூர்பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் போதாது: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை
/

சூர்யான்ஷ் ஷெட்ஜின் அதிரடியால் குஜராத்துக்கு 164 ரன்கள் இலக்கு!

சூர்யான்ஷ் ஷெட்ஜின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது குறித்து...

News image

சூர்யான்ஷ் ஷெட்ஜ் - படம் - ஏபி

Updated On :3 மே 2026, 4:20 pm

அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டுத் திடலில் நடந்த 46 ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி சூர்யான்ஷ் ஷெட்ஜின் அதிரடி ஆட்டத்தால் 163 ரன்கள் எடுத்தது.

2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் இன்றைய முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன.

டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. 8.4 ஓவர்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 21 பந்துகளுக்கு 19 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இதனையடுத்து, களமிறங்கிய பேட்டர்கள் அணியின் சூழலுக்கு ஏற்றவாறு விளையாடிய நிலையில், சூர்யான்ஷ் ஷெட்ஜ் அதிரடியாக விளையாடி 29 பந்துகளுக்கு 57 ரன்களை எடுத்தார். அதன்பிறகு, களமிறங்கிய பேட்டர்களும் சிறப்பாக விளையாடியதால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

குஜராத் அணியில் அபாரமாக பந்து வீசிய ஜேசன் ஹோல்டர் நான்கு விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் ககிசோ ரபாடா தலா இரண்டு விக்கெட்டுகளையும், ரஷித் கான் ஒரு வெக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆகையால், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி 164 ரன்களை இலக்காகக நிர்ணயித்துள்ளது.

Summary

In the 46th league match held at the Narendra Modi Stadium in Ahmedabad, the Punjab Kings batting first scored 163 runs, powered by a blistering innings from Suryansh Shedge.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.