தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் அவசர கூட்டம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்த மூன்றாவது வங்கதேச வீரர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்த மூன்றாவது வங்கதேச வீரர் என்ற சாதனையை மோமினுல் ஹேக் படைத்துள்ளார்.

News image

மோமினுல் ஹேக்

Updated On :53 நிமிடங்கள் முன்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்த மூன்றாவது வங்கதேச வீரர் என்ற சாதனையை மோமினுல் ஹேக் படைத்துள்ளார்.

பாகிஸ்தான் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 413 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 386 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், வங்கதேசம் பாகிஸ்தானைக் காட்டிலும் 27 ரன்கள் முன்னிலை பெற்றது.

27 ரன்கள் என்ற முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேசம், நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் மோமினுல் ஹேக் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ அரைசதம் கடந்து அசத்தினர். மோமினுல் ஹேக் 120 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 58 ரன்களுடனும், முஷ்பிகர் ரஹீம் 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் 56 ரன்கள் எடுத்ததன் மூலம், மோமினுல் ஹேக் வங்கதேச அணிக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பாக, முஷ்பிகுர் ரஹீம் மற்றும் தமிம் இக்பால் வங்கதேச அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன்களைக் கடந்து முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

வங்கதேச அணிக்காக இதுவரை 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மோமினுல் ஹேக் 5006 ரன்கள் எடுத்துள்ளார்.

Summary

Mominul Haque has achieved the distinction of becoming the third Bangladeshi player to cross the 5,000-run mark in Test cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.