ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த அணிகளின் தரவரிசையை ஐசிசி இன்று (மே 11) வெளியிட்டுள்ளது. அதில், இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் உள்ளன.
இது தொடர்பாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 118 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 113 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், 109 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. தென்னாப்பிரிக்கா (102 புள்ளிகள்), பாகிஸ்தான் (98 புள்ளிகள்), இலங்கை (96 புள்ளிகள்), ஆப்கானிஸ்தான் (93 புள்ளிகள்), இங்கிலாந்து (89 புள்ளிகள்), வங்கதேசம் (84 புள்ளிகள்), மேற்கிந்தியத் தீவுகள் (74 புள்ளிகள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மார்ச் 31, 2027-ல் உள்ள ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை நிலவரப்படி முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்தாண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெறும். போட்டியை நடத்தும் நாடுகளான தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஐசிசியின் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து நடைபெற்ற ஒருநாள் போட்டிகளின் அடிப்படையில் தற்போது ஐசிசி இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The Indian team has retained the top spot in the ICC ODI rankings.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா
ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்த இந்தியா!

ஐசிசி தரவரிசையில் ஷஃபாலி வர்மா முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஸ்மிருதி மந்தனா!

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை


