புதிய உச்சத்தில் முட்டை விலை!விசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

எங்களால் அழுத்தத்தைக் கையாள முடியவில்லை: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

தங்களால் அழுத்தத்தைக் கையாள முடியவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர் பிராட் ஹேடின் தெரிவித்துள்ளார்.

News image

பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் - படம் | AP

Updated On :15 மே 2026, 6:16 pm IST

தங்களால் அழுத்தத்தைக் கையாள முடியவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர் பிராட் ஹேடின் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் தோல்வியே காணாமல் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்து மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் எளிதில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும் என்ற நிலை மாறி, கடைசி இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு அந்த அணி தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருவதால் தங்களால் அழுத்தத்தைக் கையாள முடியவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர் பிராட் ஹேடின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த சில போட்டிகளாக பஞ்சாப் கிங்ஸ் அணியால் அழுத்தத்தை சரிவர கையாள முடியவில்லை. தேவையான நேரத்தில் எங்களது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்ததால் தொடர்ச்சியாக தோல்வியடைகிறோம். தொடர்ச்சியான தோல்விகள் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த சீசனை மிகவும் நன்றாக தொடங்கினோம். ஆனால், தற்போது தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறோம். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. எங்களது ஆட்டத்தை மேம்படுத்திக் கொண்டு நன்றாக விளையாட வேண்டும் என்றார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி அதன் கடைசி இரண்டு லீக் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளை எதிர்த்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Punjab Kings assistant coach Brad Haddin has stated that they were unable to handle the pressure.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.