யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

ஆபாசமாகப் பேசிய ரிஷப் பந்த்..! சமூக வலைதளத்தில் கடும் விமர்சனங்கள்!

தோல்விக்குப் பிறகு லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பேசியது குறித்து...

News image

ரிஷப் பந்த். - படம்: பிசிசிஐ / ஐபிஎல்.காம்

Updated On :20 மே 2026, 4:43 pm IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்ற பிறகு லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷ்ப் பந்த் பேசியது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ அணி  20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் சேர்க்க, அடுத்து விளையாடிய ராஜஸ்தான் 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 225 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் ரிஷப் பந்த் 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தார். ஏற்கெனவே தொடரிலிருந்து வெளியேறினாலும் இந்தப் போட்டியில் 220 ரன்கள் எடுத்தும் தோல்வியுற்றது பேசுபொருளாகியுள்ளது.

தோல்விக்குப் பிறகு பேசிய லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ஆபாசமாகப் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆங்கிலத்தில் எஃப் என்ற எழுத்தில் தொடங்கும் ஆபாசமான வார்த்தையை உபயோகித்த ரிஷப் பந்த் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

போட்டிக்குப் பிறகு ரிஷப் பந்த், “புள்ளிப் பட்டியலோ அல்லது நாங்கள் தற்போது இருக்கும் சூழ்நிலையோ எதுவாக இருந்தாலும் நாங்கள் ஒரு அணியாகப் பெருமைப்படுகிறோம். இந்த அணி மீது நம்பிக்கையாக இருக்கிறோம்.

இந்தப் போட்டியில் தோல்வியுற்றாலும் நாங்கள் (எஃப் என்ற எழுத்தில் தொடங்கும் ஆபாசமான வார்த்தை) நல்ல அணி என்பதில் மாற்றுக்கருத்தில்லை” என்றார்.

Summary

We are fucking good team controversy eruputs for Rishabh Pant last night speech

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.