ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தலை நிமிருங்கள் கேப்டன்..! ஷுப்மன் கில்லின் கிண்டலுக்கு ஆர்சிபி பதிலடி!

குஜராத் கேப்டன் ஷுப்மன் கில்லின் முந்தைய கேலிக்குப் பதிலளித்த ஆர்சிபியின் பதிவு குறித்து...

Shubman Gill, Rajat Patidar.

ஷுப்மன் கில், ரஜத் படிதார். - படம்: எக்ஸ் / ஆர்சிபி

Published On :

குஜராத் கேப்டன் ஷுப்மன் கில்லின் முந்தைய கேலியானப் பதிவுக்கு ஆர்சிபி பதிலடி கொடுத்துள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நேற்றிரவு நடந்த குவாலிஃபயர் 1 போட்டியில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்கலில் 254/5 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய குஜராத் 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தப் போட்டியில் ரஜத் படிதார் 33 பந்துகளில் 93 ரன்கள் குவித்து அசத்தினார். ஆட்ட நாயகன் விருதும் வென்று அசத்தியுள்ளார்.

முன்னதாக லீக் சுற்றில் ஆர்சிபியுடன் மோதிய குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் 42ஆவது போட்டியில் ஆர்சிபி 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆட்டமிழக்க, குஜராத் 15.5 ஓவர்களில் 158/6 ரன்கள் எடுத்து வென்றது. இந்த வெற்றிக்குப் பிறகு ஷுப்மன் கில் தனது இன்ஸ்டா பக்கத்தில், “பிளே ஹோல்டு ஜேசன் ஹோல்டர். அணி இன்று தைரியமாக (பிளே போல்டு) விளையாடியது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

’பிளே போல்டு’ என்பது ஆர்சிபியின் முழக்க வாசகமாக இருக்கிறது. தற்போது, குவாலிஃபயர் 1ல் வென்ற பிறகு ஷுப்மன் கில் உடன் ரஜத் படிதார் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ தைரியமாக விளையாடினோம். மரியாதை பெறப்பட்டது. எப்போதும் தலை நிமிர்ந்து இருங்கள் கேப்டன்!” எனக் குறிப்பிட்டுள்ளது.

Played Bold. Respect earned. rcb tweets about shubman Gill mockery post

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.