எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

கோடையிலிருந்து தீபாவளிக்கு மாறும் ஐபிஎல் தொடர்!

ஐபிஎல் தொடரை கோடையிலிருந்து தீபாவளிக்கு மாற்றும் பரிசீலனை பற்றி...

News image

கோப்புப்படம் - ANI

Updated On :27 மே 2026, 3:52 pm IST

இந்தியன் பிரீமியர் லீக் தொடரை கோடை காலத்திலிருந்து தீபாவளி பண்டிகை காலத்துக்கு மாற்ற பரிசீலித்து வருவதாக ஐபிஎல் தலைவர் அருண் தூமல் தெரிவித்துள்ளார்.

2026 ஐபிஎல் தொடர் பிளே ஆஃப் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. முதல் பிளே ஆஃப் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது.

ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலும் கோடைக் காலத்தை ஒட்டியே இந்த தொடர் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், செப்டம்பர் - அக்டோபர் காலகட்டத்துக்கு ஐபிஎல் தொடரை மாற்ற பரிசீலனை செய்து வருவதாக ஐபிஎல் தலைவர் அருண் தூமல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேட்டியொன்றில் அவர் பேசியதாவது:

”ஐபிஎல் தொடரில் தற்போது 10 அணிகள் 74 போட்டிகளில் விளையாடி வருகின்றன. வருகின்ற 2028 முதல் போட்டிகளை அதிகப்படுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். கோடை வெப்பம் தீவிரமான கவலையாக மாறியுள்ளது. பல்வேறு திடல்களில் சுட்டெரிக்கும் வெப்பம் நிலவுவதால் வீரர்கள் விளையாடுவதற்கு கடினமான சூழல் உருவாகிறது. வீரர்கள் நீரிழப்பு, தசைப்பிடிப்பு மற்றும் சோர்வு ஆகியவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர்.

வானிலையைத் தவிர, வீரர்களின் பணிச்சுமை மேலாண்மையும் மற்றொரு முக்கியப் பிரச்சினையாகும். பெரும்பாலான சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் பிப்ரவரி அல்லது மார்ச் இறுதி வரை நடைபெறுகிறது. இதன்விளைவாக தேசிய அணிக்கு விளையாடியவுடன் போதுமான ஓய்வின்றி ஐபிஎல் தொடரில் வீரர்கள் விளையாடுகின்றனர்.

இந்த நிலையில், வேறு மாதங்களில் ஐபிஎல் தொடர் நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் போட்டியை நடத்துவதே வலுவான பரிந்துரைகளில் ஒன்றாக உள்ளது. தீபாவளிக்கு முன்னதாக வருவதால் விளம்பரதாரர்களின் பார்வையிலும் அதுவே சிறந்த காலமாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

The IPL Tournament Shifts from Summer to Diwali!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.