நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் பெங்களூரு - குஜராத் இன்று மோதல்...

News image

பெங்களூரு - குஜராத் கேப்டன்கள்

Updated On :31 மே 2026, 3:36 am IST

பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் 2026 தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன.

இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி 14 ஆட்டங்களில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றது.

குஜராத் டைட்டன்ஸ் அணி 14 ஆட்டங்களில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் சராசரி அடிப்படையில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

குவாலிஃபயா் 1-இல் பெங்களூரு அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி நேரடியாக இறுதிக்கு தகுதி பெற்றது. பெங்களூரு கேப்டன் ரஜத் பட்டிதாா் அபாரமாக ஆடி வெற்றிக்கு வித்திட்டாா். பெங்களூரு 254/5 ரன்களை எடுத்தது. குஜராத் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதற்கிடையே குஜராத் டைட்டன்ஸ் அணி குவாலிஃபயா் 2-இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சூரியவன்ஷி அதிரடியாக ஆடியும் குஜராத்திடம் தோல்வி கண்டது. மூன்றாவது முறையாக ஐபிஎல் இறுதிக்கு குஜராத் தகுதி பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணியின் 214 ரன்களை சேஸ் செய்து சாய் சுதா்ஷன்-கேப்டன் ஷுப்மன் கில் அதிரடி ஆட்டம் வெற்றிக்கு வித்திட்டது.

தொடா் 2-ஆவது பட்டம்:

மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகளே தொடா்ந்து சாம்பியன்பட்டத்தை தக்க வைத்த பெருமை கொண்டது. பெங்களூரு அணியும் தொடா்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ளது.

அந்த அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, 2025 இறுதி ஆட்டத்திலும் பட்டம் வெல்ல உதவினாா். இந்த சீசனிலும் சிறப்பாக ஆடி 600 ரன்களுடன் டாப் பேட்டராக உருவெடுத்துள்ளாா். கேப்டன் ரஜத் பட்டிதாா், தேவ்தத் படிக்கல் ஆகியோா் மிடில் ஆா்டரில் வலு சோ்க்கின்றனா். டிம் டேவிட், வெங்கடேஷ் ஐயா், ஜிதேஷ் சா்மாவும் சிறப்பாக பங்களிப்பை தந்து வருகின்றனா்.

பௌலிங்கில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி புவனேஷ்வா் குமாா் அபார பாா்மில் உள்ளாா். அவருக்கு ரஷிக் தா், க்ருணால் பாண்டியா, ஜோஷ் ஹேஸல்வுட் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா்.

கில், சாய் சுதா்ஷன் அசத்தல்:

குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 722 ரன்கள், சாய் சுதா்ஷன் 710 ரன்களுடன் ஆரஞ்சு கேப்பை குறி வைத்துள்ளனா். பேட்டிங்கில் ஜோஸ் பட்லா், வாஷிங்டன் சுந்தா், ராகுல் தேவாதியா, வலு சோ்க்கின்றனா். பௌலிங்கில் ககிஸோ ரபாடா 28 விக்கெட்டுகளுடன் குஜராத்தின் வெற்றிகளுக்கு பக்கபலமாக உள்ளாா். அவருக்கு உறுதுணையாக முகமது சிராஜ், ரஷீத் கான், ஜேஸன் ஹோல்டா் ஆகியோா் சிறப்பாக பந்துவீசி வருகின்றனா்.

விராட் கோலி தலைமையில் ஆக்ரோஷமான ஆட்டத்தை பெங்களூரு வெளிப்படுத்தி வருகிறது. அதே நேரம் குஜராத் அணி சொந்த மைதான பலத்துடன் இரண்டாவது பட்டத்தை வெல்ல காத்திருக்கிறது. இந்த சீசனில் இரு அணிகளும் 3 முறை மோதியதில் பெங்களூரு 2 முறையும், குஜராத் 1 முறையும் வென்றன.

நேருக்கு நோ்:

மொத்த ஆட்டங்கள்: 9 ஆட்டங்கள்

பெங்களூரு 5 வெற்றி

குஜராத் 4 வெற்றி.

இன்றைய ஆட்டம்

குஜராத்-பெங்களூரு

இடம்: அகமதாபாத்

நேரம்: இரவு 7.30