லெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்திருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுஉக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

இந்த சீசன் முழுவதும் நேர்மறையான கிரிக்கெட் விளையாடினோம்: துருவ் ஜுரெல்

நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் நேர்மறையான கிரிக்கெட் விளையாடியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார்.

News image

துருவ் ஜுரெல் - படம் | ராஜஸ்தான் ராயல்ஸ் (எக்ஸ்)

Updated On :30 மே 2026, 3:38 pm IST

நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் நேர்மறையான கிரிக்கெட் விளையாடியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நியூ சண்டீகரில் நேற்று (மே 29) நடைபெற்ற குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறத் தவறியது.

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் நேர்மறையான கிரிக்கெட் விளையாடியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு விக்கெட் கீப்பராக பந்துவீச்சாளர்களிடம் பேசும்போது, அவர்களிடம் நீங்கள் இப்படி பந்துவீசுங்கள் என ஒருபோதும் நான் கூறியதில்லை. நீங்கள் மிகவும் நன்றாக பந்துவீசக் கூடியவர்கள், அதன் காரணமாக அணியில் இடம்பெற்று விளையாடுகிறீர்கள் என்பதையே அவர்களிடம் கூறுவேன். அணியில் இணைந்துள்ள வீரர்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது.

அணியில் உள்ள வீரர்களிடத்தில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் எனக் கூறினேன். எந்த மாதிரியான பந்துவீச்சை வெளிப்படுத்த திட்டமிட்டிருந்தாலும், உங்களது திட்டங்களில் தெளிவாக இருங்கள் எனக் கூறினேன். அதிகம் யோசிக்காதீர்கள். நாம் நன்றாக விளையாட வேண்டியிருக்கிறது. நேர்மறையான கிரிக்கெட்டினையும் விளையாட வேண்டியிருக்கிறது எனக் கூறினேன். நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதுமே நாங்கள் அனைவரும் நேர்மறையான கிரிக்கெட்டினை விளையாடினோம் என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய துருவ் ஜுரெல் 16 போட்டிகளில் 515 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Rajasthan Royals player Dhruv Jurel has stated that he played positive cricket throughout the current IPL season.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.