ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

அறிமுக போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர் அராஃபத் மின்ஹாஸ்!

பாகிஸ்தான் வீரர் அராஃபத் மின்ஹாஸ் தனது அறிமுக போட்டியில் நிகழ்த்திய சாதனை குறித்து...

News image

5 விக்கெட்டுகள் வீழ்த்திய மகிச்சியில் பாகிஸ்தான் வீரர் அராஃபத் மின்ஹாஸ். - படம்: ஏபி

Updated On :31 மே 2026, 2:37 pm IST

ராவல்பிண்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் அராஃபத் மின்ஹாஸ் தனது அறிமுக ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை நிகழ்த்தியுள்ளார்.

ராவல்பிண்டியில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 44.1 ஓவர்களில் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 42.3 ஓவர்களில் 202/5 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் அறிமுகமான 21 வயது பாகிஸ்தானின் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் அராஃபத் மின்ஹாஸ் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதுவரை பாகிஸ்தான் வீரர்களில் யாருமே தனது அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பாக பந்துவீசி அசத்திய அராஃபத் மின்ஹாஸுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அடுத்த போட்டி லாகூரில் ஜூன் 2ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

அறிமுக ஒருநாள் போட்டியில் அசத்திய பாகிஸ்தான் வீரர்கள்

1. அராஃபத் மின்ஹாஸ் - 32/5 (2026)

2. ஜாகீர் கான் - 19/4 (1984)

3. அப்துல் காதிர் - 21/4 (1983)

4. அப்ரார் அகமது - 33/4 (2024)

5. சர்ஃபராஸ் நவாஸ் - 46/4 (1973)

Summary

Pakistan Player Arafat Minhas Sets Historic Record in Debut Match!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.