மிகப்பெரிய சதம் அடிப்பேன் என தந்தையிடம் வாக்குறுதி அளித்திருந்தேன்: ஆர்யவீர் சேவாக்
யு19 ஆசிய கோப்பையில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஆர்யவீர் சேவாக் அளித்த பேட்டி குறித்து...

விரேந்திர சேவாக், ஆர்யவீர் சேவாக் - படங்கள்: பிடிஐ, பிசிசிஐ
ஓமனில் நடைபெற்ற யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஆர்யவீர் சேவாக் அளித்த பேட்டியில், “எனது தந்தையிடம் மிகப்பெரிய சதம் அடிப்பேன் என வாக்குறுதி அளித்தேன்” எனக் கூறியுள்ளார்.
லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகம் (யுஎஇ) உடன் மோதியது. இதில் டாஸ் வென்ற யுஎஇ பந்துவீச, இந்தியா முதலில் விளையாடி 50 ஓவர்களில் 309/7 ரன்கள் எடுத்தது.
இதில் இந்தியாவின் தொடக்க வீரராக களமிறங்கிய முன்னாள் வீரர் சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் அதிகபட்சமாக 160 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 17 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும்.
அடுத்து விளையாடிய யுஎஇ 50 ஓவர்களில் 239 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அத்துடன் அரையிறுதிக்கும் முன்னேறியது. இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஆர்யவீர் சேவாக் அளித்த பேட்டி குறித்து:
மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இன்று அதிகபட்ச ரன் அடிக்க வேண்டுமென ஒருவரிடம் வாக்குறுதி அளித்திருந்தேன். நல்லவேளையாக அதை நிறைவேற்றி விட்டேன். அந்த ஒருவர் எனது தந்தைதான் (விரேந்திர சேவாக்).
எனது தந்தையிடம் இன்று மிகப்பெரிய சதம் அடிப்பேன் எனக் கூறியிருந்தேன். அவருக்கு மிகப்பெரிய சதங்கள் மட்டுமே பிடிக்கும் என்பதால் நானும் அதேபோல் ஒரு லெக்சியை தொடர விரும்புகிறேன்.
களத்தில் பந்து சற்று திரும்புவதாக இருந்தது. 40 ஓவர்கள் வரைக்குமாவது விளையாட வேண்டுமென தொடக்கத்திலேயே நினைத்திருந்தேன். ஆனால், அது சவாலாக இருந்தது. டாட் பந்துகள் குறித்து நான் கவலைப்படுவதில்லை. அதை சரிசெய்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது என்றார்.
The pitch had its challenges, but Aaryavir Sehwag had all the answers. â¨
— Sony Sports Network (@SonySportsNetwk) November 10, 2026
Watch #INDvUAE in the DP World Men's U19 Asia Cup, LIVE NOW on Sony Sports Network TV channels & Sony LIV.#SonySportsNetwork #SonyLIV pic.twitter.com/wDk1jkO1Pn
Summary
Promised my dad that I would get a big hundred: Aaryavir Sehwag
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


