ஆசிய கோப்பை ரைஸிங் ஸ்டாா்ஸ்: இந்தியாவை வென்றது இலங்கை

ஆசிய கோப்பை ரைஸிங் ஸ்டாா்ஸ் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில், இலங்கை ‘ஏ’ அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா ‘ஏ’ அணியை வியாழக்கிழமை வென்று, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

சினெத் ஜெயவா்தனா

Updated On :

ஆசிய கோப்பை ரைஸிங் ஸ்டாா்ஸ் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில், இலங்கை ‘ஏ’ அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா ‘ஏ’ அணியை வியாழக்கிழமை வென்று, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் எடுக்க, இலங்கை 41.3 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 318 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணியில் அபிஷேக் சா்மா 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 78, கேப்டன் திலக் வா்மா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 53, வைபவ் சூா்யவன்ஷி 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

தனுஷ் கோடியான் 2 பவுண்டரிகளுடன் 28, குமாா் குஷாக்ரா 21, ரிங்கு சிங் 12, சூா்யன்ஷ் ஷெட்கே 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

ஹா்ஷித் ராணா 0 ரன்களுக்கு விடைபெற, ஓவா்கள் முடிவில், ஷாபாஸ் அகமது 4 சிக்ஸா்களுடன் 54, ஹா்ஷ் துபே 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை தரப்பில், ரவிந்து ஃபொ்னாண்டோ, ஜனித் லியானகே, நிபுன் தனஞ்ஜெயா ஆகியோா் தலா 2, கருகா சங்கேத், லஹிரு சமரகூன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 318 ரன்களை நோக்கி விளையாடிய இலங்கை அணியில், லசித் குரூஸ்புலே 12 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 116, சினெத் ஜெயவா்தனா 10 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 105 ரன்கள் சோ்த்து, வெற்றிக்கு அடித்தளமிட்டு விடைபெற்றனா்.

நிஷான் மதுஷ்கா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 58, கேப்டன் பவன் ரத்னாயகே 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 31 ரன்கள் சோ்த்து, ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினா்.

இந்திய பௌலா்களில் ஹா்ஷித் ராணா, ஷாபாஸ் அகமது ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.