தவெக பெண் வேட்பாளரை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின் மீது தவெக புகார்கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் வசூல் முற்றிலும் தற்காலிக நிறுத்தம்: தமிழ்நாடு அரசுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதன்முறையாக பங்கேற்புமதுராந்தகம், தாராபுரத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவுகச்சா எண்ணெய் கையிருப்பை வெளியிட ஜி7 நாடுகள் முடிவு!ஆசிய விளையாட்டு: தங்கம் வென்றார் இந்திய வில்வித்தை வீராங்கனை மொஹோத்!

இறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா, திலக் வர்மா அரைசதம்: பாகிஸ்தானுக்கு 212 ரன்கள் இலக்கு!

ஆசிய விளையாட்டு ஆடவருக்கான கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பேட்டிங் குறித்து...

Tilak Varma, Abhishek Sharma,

திலக் வர்மா, அபிஷேக் சர்மா. - படங்கள்: பிசிசிஐ

Published On :

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் ஆடவருக்கான இறுதிப் போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் குவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. சூர்யவன்ஷி 15, சஞ்சு சாம்சன் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க அபிஷேக் சர்மா சரவெடியாக விளையாடினார்.

அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க இஷான் கிஷன் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பொறுப்புடன் விளையாடிய திலக் வர்மா 22 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷிவம் துபே 15 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் சார்பாக அராஃபத் மின்ஹாஸ், அகமது டானியல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

இந்தப் போட்டியில் வெல்லும் அணி தங்கப் பதக்கம் கிடைக்கும். இதுவரை இந்தியாவுக்கு 16 தங்கம் உள்பட 77 பதக்கங்கள் கிடைத்துள்ளன. மகளிர் கிரிக்கெட்டில் தங்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Abhishek Sharma and Tilak Varma hit half-centuries in the final: Target of 212 runs set for Pakistan!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.