அரிசி விலை உயர்வு இன்னும் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லை போலும்! பெ. சண்முகம்பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்! மக்களிடம் மனுக்களைப் பெற்றார்!மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்

விராட் கோலியின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்த இஷான் கிஷன்!

விராட் கோலியின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்த இஷான் கிஷனை பற்றி...

விராட் கோலி - இஷான் கிஷன்.

Published On :

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் 10 ஆண்டுகால சாதனையை இஷான் கிஷன் முறியடித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடர் நேற்றிரவு உத்தரப் பிரதேசத்தின் லக்னௌவில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 19.1 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 14.4 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன் 11 ரன்களிலும், அபிஷேக் சர்மா 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சர்வதேச டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அதிரடியாக விளையாடிய அவர் 43 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இஷான் கிஷன் 37 ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார்.

இந்தப் போட்டியில் 37 ரன்கள் குவித்த இஷான் கிஷன், விராட் கோலியின் 10 ஆண்டுகால சாதனையையும் முறியடித்துள்ளார். அதாவது டி20 போட்டிகளில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார். கடந்த 2026 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் விராட் கோலி 1614 ரன்கள் குவித்திருந்தார்.

அதனை முறியடித்துள்ள இஷான் கிஷன் 1644 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார். நிகழாண்டில் 45 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள இஷான் கிஷன், ஒரு சதம் மற்றும் 13 அரை சதங்கள் உட்பட 1,644 ரன்கள் எடுத்துள்ளார்.

டி20-ல் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்

  • 1644 ரன்கள் - இஷான் கிஷன் (2026)

  • 1614 ரன்கள் விராட் கோலி (2016)

  • 1602 ரன்கள் - அபிஷேக் ஷர்மா (2025)

  • 1502 ரன்கள் சூர்யகுமார் யாதவ் (2022)

  • 1395 ரன்கள் - அபிஷேக் ஷர்மா (2026)

  • 1338 ரன்கள் - சூர்யகுமார் யாதவ் (2023)

Summary

Ishan Kishan broke Virat Kohli's 10-year-old record with his unbeaten 37-run innings against West Indies and has now become the Indian batsman with the most runs in a calendar year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.