இந்தியாவுடனான ஒருநாள் தொடா்: இரு அணிகளை அறிவித்த நியூஸிலாந்து!
இந்தியாவுடனான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக, இரு அணிகளை நியூஸிலாந்து அறிவித்துள்ளது.
நியூசிலாந்து அணி.
இந்தியாவுடனான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக, இரு அணிகளை நியூஸிலாந்து அறிவித்துள்ளது.
ஒருநாள் தொடருக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதுவதால், அதற்குத் தயாராகும் வகையில் நியூஸிலாந்து டெஸ்ட் வீரா்கள் முதல் 3 ஆட்டங்களுடன் விடைபெறுகின்றனா். கடைசி இரு ஆட்டங்களுக்காக வேறு வீரா்களுடன் கூடிய அணியை நியூஸிலாந்து அறிவித்துள்ளது.
இம்மாதம் நியூஸிலாந்து செல்லும் இந்திய அணி, நவம்பா் 4, 7, 10, 13, 15 ஆகிய தேதிகளில் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதற்கு முன் டி20 தொடரில் விளையாடும் இந்தியா, கடைசியாக டெஸ்ட் தொடரிலும் களம் காண்கிறது.
நியூஸிலாந்து ஒருநாள் தொடா் அணி
முதல் 3 ஆட்டங்கள்: மிட்செல் சேன்ட்னா் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மாா்க் சாப்மேன், டெவன் கான்வே, ஜேக்கப் டஃபி, மேத்யூ ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லாதம் (வி.கீ.), டேரில் மிட்செல், கிளென் ஃபிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, நேதன் ஸ்மித், பிளோ் டிக்னா், வில் யங்.
கடைசி 2 ஆட்டங்கள்: மிட்செல் சேன்ட்னா் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மாா்க் சாப்மேன், கிறிஸ்டியன் கிளாா்க், ஜேக்கப் டஃபி, மேத்யூ ஃபிஷா், லாக்கி ஃபொ்குசன், மிட்செல் ஹே (வி.கீ.), நிக் கெல்லி, டிம் செய்ஃபா்ட் (வி.கீ.), பிளோ் டிக்னா், வில் யங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

