மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு! மும்பையில் ஞானேஷ் குமாருக்கு எதிரான சிஜேபியின் போராட்டம் தொடங்கியது! மதுராந்தகத்தில் தேநீர் கடையில் வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்!ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்! 500 பேர் கைது!செய்யறிவால் பறிபோகும் மற்றும் அசைக்க முடியாத வேலைகள்! ஃபோர்டு நிர்வாகி தகவல்தொடர் விடுமுறை! மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்!இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்! பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்!“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!

தென்னாப்பிரிக்க மண்ணில் 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் இந்தியா!

தென்னாப்பிரிக்காவில் 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் இந்திய அணியைப் பற்றி...

Published On :

2027 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்குத் தயாராகும் வகையில், தென்னாப்பிரிக்காவில் 6 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரின் 14-ஆவது சீசன் தென்னாப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வேயில் அடுத்தாண்டு (2027) நடைபெறவுள்ளது. போட்டிக்கான அட்டவணை, போட்டி நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்றிரவு (அக். 1) வெளியிட்டது. அதன்படி, அடுத்தாண்டு அக். 2 ஆம் தேதி உலகக் கோப்பை தொடங்கும் நிலையில், தனக்கான முதல் போட்டியில் இந்திய அணி - நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் தகுதிச்சுற்று 'ஏ' அணி உள்ளிட்டவை ஏ பிரிவிலும், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் பி தகுதிச்சுற்று அணி ஆகியவை பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

இந்த உலகக் கோப்பைத் தொடருக்கு தயாராகும் விதமாக தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுடன் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை கடந்து வந்த பாதைகள் மிகவும் மோசமானதாகவே இருக்கின்றன. இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி மொத்தம் 39 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்தப் போட்டிகளில், 13-ல் வெற்றி, 23-ல் தோல்வியும் அடைந்துள்ளது. இதனால், இந்திய அணி வீரர்கள் தென்னாப்பிரிக்க ஆடுகளங்களுக்கு பழகிக்கொள்ளும் வகையில், செஞ்சுரியன், கேப் டவுன் மற்றும் ஜோகன்னஸ்பர்க் போன்ற முக்கிய திடல்களில் போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, அதைத் தொடர்ந்து நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகளுடன் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. மேலும், ஆசியக் கோப்பை ஒருநாள் தொடரிலும் விளையாடவிருப்பதால், இந்திய அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Summary

India will have a perfect dress rehearsal for the ODI World Cup 2027 as they will be playing a six-match ODI series against South Africa before the showpiece tournament kicks off

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER