சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேக்கம் இல்லை: மாநகராட்சி தகவல்! 137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு அணி மோதும் ரஞ்சி போட்டிகளுக்கு இலவச அனுமதி!

சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு அணி மோதும் ரஞ்சி போட்டிக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On :

சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு அணி மோதும் ரஞ்சி போட்டிகளை ரசிகர்கள் கட்டணமின்றி கண்டு களிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

2026-27 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன.

குரூப் ஏ, பி, சி, டி என்று நான்கு பிரிவுகளின் தலா 8 அணிகள் தங்களுக்குள் மோதிக்கொள்கின்றன. நடப்பு சாம்பியனான ஜம்மு-காஷ்மீர், மத்தியப் பிரதேசத்தை எதிர்கொள்கிறது. 'பி' பிரிவில் ஆந்திராவும் ஹைதராபாத்தும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த ரஞ்சி தொடரில் மொத்தமாக 38 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த நிலையில், இன்று (அக். 18) காலை தொடங்கும் உத்தரகண்டுக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி விளையாடுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தப் போட்டிக்கும், வருகிற அக். 26 ஆம் தேதி ரயில்வேஸ்க்கு எதிரான போட்டிக்கும் இலவச அனுமதி வழங்கப்படும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

கேட் 4-ஆவது நுழைவு வாயிலில் லோயர் சி, டி, இ பிரிவுகளில் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Summary

The Tamil Nadu Cricket Association has announced that fans can watch the Ranji matches where the Tamil Nadu team will play in Chepauk, Chennai, free of charge.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.