சென்னை சேப்பாக்கத்தில் போராடிய மாணவர் அமைப்பினர் குண்டுக்கட்டாக கைது!
ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் குண்டுக்கட்டாக கைது....
சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் - X
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து, அவருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டதையடுத்து கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிஜேபிக்கு ஆதரவாக சென்னையிலும் இன்று பல்வேறு பகுதிகளில் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
சென்னை சேப்பாக்கம் பகுதியில் போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர், காவல்துறையால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனைவரும் கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.
இதேபோல பெசன்ட் நகர் பகுதியில் போராடியவர்களை கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Student activists protesting at Chepauk, Chennai, were forcibly arrested
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

