தென்னாப்பிரிக்காவில் மீண்டும் மழை: 5.3 ஓவர்களில் மதிய உணவு இடைவேளை!
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து...

ஆடுகளத்தை விட்டு வெளியேறும் தென்னாப்பிரிக்க வீரர்கள். - படம்: ஏபி
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி 5.3 ஓவர்களில் மழையினால் மதிய உணவு இடைவேளை விடுக்கப்பட்டுள்ளது.
செயின்ட் ஜார்ஜ் திடலில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில் மழை வந்ததால் போட்டி தாமதமாக நடைபெற்றது.
இந்தப் போட்டி மழை நின்ற பிறகு 5.3 ஓவர்கள் வீசப்பட்டன. பிறகு மீண்டும் மழை குறுக்கிட்டதால், இந்தப் போட்டியில் மதிய உணவு இடைவேளை விடுக்கப்பட்டுள்ளது.
தொடக்க வீரர்கள் மார்கரம் 10 ரன்களும் அறிமுக வீரர் மார்க்ஸ் அக்கர்மேன் 1 ரன்னும் எடுத்துள்ளார்கள். ஹேசில்வுட் பந்துவீசிக்கொண்டிருந்த போது ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்தப் போட்டியைப் பார்க்க காத்திருந்த ரசிகர்கள் வருத்ததுடன் திடலில் காத்திருக்கிறார்கள்.
அறிமுக வீரர் அக்கர்மேன் அரங்கத்தில் இருந்த தனது மனைவு மற்றும் குழந்தைக்கு கை அசைத்தபடி களத்தில் இருந்து வெளியேறினார்.
Early Lunch Called! ð§ï¸
— Proteas Men (@ProteasMenCSA) October 18, 2026
An early lunch has been taken on Day 1 of the second Dafabet Test.#TheProteas are 11/0 after 5.3 overs. ð¿ð¦ð#Unbreakable #SAvAUS pic.twitter.com/7HYVdFipFI
Summary
Rain again in South Africa: Lunch break in 5.3 overs!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


