சிலை வைக்கலாம்..! 150 பந்துகளைக் கடந்து பேட்டிங் செய்யும் ஸ்காட் போலண்ட்!
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் பேட்டிங் குறித்து...

தடுப்பாட்டத்தில் ஸ்காட் போலண்ட் - afp
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் 150க்கும் அதிகமான பந்துகளை எதிர்கொண்டு பேட்டிங் செய்து வருகிறார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பந்துவீசியது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 425/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து, ஃபாலோ ஆன் ஆனதால் இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸி. பேட்டி செய்து வருகிறது.
நேற்று மாலை நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய ஸ்காட் போலண்ட் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். வழக்கமாக பந்துவீச்சில் அசத்தும் இவர் தற்போது பேட்டிங்கில் அசத்தி வருகிறார்.
ஹேசில்வுட் இருப்பதால் பல போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் 37 வயதான இவர் இதுவரை 24 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
இந்தப் போட்டியில் 100 பந்துகளுக்கு மேல் பேட்டிங் செய்த இரண்டாவது ஆஸி. வீரராக போலண்ட் இருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. தனது அதிகபட்ச ரன்னை கடந்து 40 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
பந்துவீச்சில் அசத்தும் ஸ்காட் போலண்டிற்கு ஆஸ்திரேலியாவில் சிலை வைக்க வேண்டும் என ரசிகர்கள் கூறுவது வழக்கம். அவரது பந்துவீச்சுக்காக இதைக் கூறியவர்கள் தற்போது பேட்டிகிற்காகவும் கூறி வருகிறார்கள்.
தற்போது, ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்து, 73 ரன்கள் பின் தங்கியுள்ளது. தெ.ஆ. வெற்றி பெற இன்னும் 4 விக்கெட்டுகள் தேவையாக இருக்கிறது.
Scott Boland has now faced more than 100 balls in a Test innings for the first time in his career.
— Cricinfo (@cricinfo) October 22, 2026
Fighter. pic.twitter.com/9bGuXIqyLp
Dear Australian top-order batters, please make Scott Boland your batting coach and learn the art of defensive batting from him. Heâs genuinely better at defending the ball than most of Australiaâs top-order batters! pic.twitter.com/eqly2M0pK2
— India Spectator (@IndiaSpectator1) October 22, 2026
What an atrocious shot from a 127 test capped seasoned campaigner Steve Smith. Just terrible. He has let the team down big time.
— Troll cricket unlimitedd (@TUnlimitedd) October 22, 2026
Pitch is doing absolutely nothing, even a tailender like Scott Boland is batting comfortably- giving his 100% effort for the team and he goes on toâ¦
Summary
Australia's Scott Boland plays more than 150 balls in batting as night watchman, build a statue for him
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


