30 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இந்திய வீராங்கனை!
30 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இந்திய வீராங்கனையைப் பற்றி...
ஸ்மிருதி மந்தனாவுடன் சபினேனி மேகனா.
காமன்வெல்த்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வீராங்கனை சபினேனி மேகனா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2022 இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் மகளிருக்கான கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு தங்கப்பதக்கமும், தோல்வியடைந்த இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது.
இந்தத் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பேட்டர் மேகனா, தன்னுடைய 30 வயதிலேயே அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், சக வீரர்கள், துணைப் பணியாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆந்திரத்தில் பிறந்த வலதுகை பேட்டரான சபினேனி மேகனா, 2016 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியிலும், அதைத்தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் அறிமுகமானார்.
இதுவரை மூன்று ஒருநாள் போட்டிகளிலும், 17 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள சபினேனி மேகனா முறையே 114 மற்றும் 258 ரன்கள் குவித்துள்ளார்.
சபினேனி மேகனா, 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக்கின் தொடக்க சீசனில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடினார்.
அதன்பின்னர் 2024-ஆம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணைந்தார். மேலும், அந்த ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்தார்.
Summary
India batter Sabbhineni Meghana has announced her retirement from all formats of cricket, ending a career that included representing India at the 2022 Commonwealth Games, where the team won silver.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

