வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!தவெகவின் நிலைப்பாட்டைப் பொருத்து அரசுக்கு ஆதரவு தொடரும்! பெ. சண்முகம் பேட்டிதிருத்தணி முருகன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி!5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு! செப். 28-ல் இறுதி விசாரணை!

துலீப் கோப்பை: 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் மண்டலம் 532 ரன்கள் பின்னிலை!

துலீப் கோப்பை இறுதிப் போட்டியின் மூன்றாம் நாள் குறித்து...

East Zone team players rejoicing after taking a wicket.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கிழக்கு மண்டல் அணி வீரர்கள். - படம்: பிசிசிஐ

Published On :

துலீப் கோப்பை இறுதிப் போட்டியின் மூன்றாம் நாளில் இரண்டாம் செஷன் முடிவில் தென் மண்டல அணி 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களுக்கு தடுமாறி வருகிறது.

சென்னையில் சேப்பாக்கம் திடலில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கிழக்கு மண்டலம், 708 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் இஷான் கிஷன் 270 ரன்கள் குவித்தார்.

அடுத்ததாக தனது முதல் இன்னிங்ஸை விளையாடும் தென் மண்டல அணி 56 ஓவர்களில் 176 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 532 ரன்கள் பின் தங்கிய நிலையில், இன்றைய நாளில் ஆல் அவுட் ஆகாமல் தப்பிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த அணியில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 62 ரன்கள் எடுத்தார். கேப்டன் திலக் வர்மா 18 ரன்களுடனும் ஷ்ரேயாஸ் கோபால் 2 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.

கிழக்கு மண்டல் அணி சார்பாக பந்துவீச்சில் முகமது ஷமி, முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்கள். ஷமி வீசிட்ய 9 ஓவர்களில் 4 ஓவர்கள் மெய்டானனது குறிப்பிடத்தக்கது.

Summary

Duleep Trophy Finals South Zone loses 5 wickets and Struggling at Chepauk Stadium

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.