தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

மீண்டும் இந்திய அணிக்காக விளையாடினால் மகிழ்ச்சியடைவேன்: புவனேஷ்வர் குமார்

மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடினால் மகிழ்ச்சியடைவேன் என வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

Bhuvneshwar Kumar

புவனேஷ்வர் குமார் - படம் | AP

Published On :

மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடினால் மகிழ்ச்சியடைவேன் என வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமார் கடைசியாக இந்திய அணியில் கடந்த 2022 ஆம் ஆண்டு விளையாடினார். அதன் பின், அவர் தேசிய அணிக்காக விளையாடவில்லை. இருப்பினும், கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் அவருக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், மீண்டும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன் என புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் எந்தவொரு விஷயத்தையும் நிரூபிப்பதற்காக விளையாடவில்லை. ஆனால், மீண்டும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன். சில தொடர்கள் வரை எனக்கு அழைப்புகள் வந்ததால் மீண்டும் அணிக்காக விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அந்தக் காலக்கட்டத்தில் என்னுடைய குடும்பம் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள் என்றார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் புவனேஷ்வர் குமார், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அவர் 28 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கடந்த இரண்டு சீசன்களிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்று அசத்தியது.

36 வயதாகும் புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து 229 போட்டிகளில் விளையாடி 294 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

Summary

Fast bowler Bhuvneshwar Kumar has stated that he would be happy if he gets to play for the Indian team again.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.