
உலகின் முதல் வீராங்கனை.. வரலாற்றுச் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஸ்மிருதி மந்தனா.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ஜப்பானின் நகாயோவில் நடைபெற்று வரும் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது.
நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் நடைபெற்று வரும் தங்கப்பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி வரும் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி இருவரும் அதிரடியாக ரன்களைக் குவித்தனர்.
இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா, 45 பந்துகளில் 5 பௌண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 79 ரன்கள் குவித்து கவிஷா தில்ஹரியின் பந்து வீச்சில் வீழ்ந்தார்.
இந்தப் போட்டியில் 13 ரன்கள் எடுத்தபோது ஸ்மிருதி மந்தனா, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனைக்குச் சொந்தக்காரரானார். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 30 வயதான ஸ்மிருதி மந்தனா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 11,000 ரன்களை எட்டிய முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.
2013 ஆம் ஆண்டு ஏப். 5 ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் மூலம், சர்வதேசப் போட்டிகளில் அடியெடுத்து வைத்த ஸ்மிருதி மந்தனா, 120 ஒருநாள் மற்றும் 179 டி20ஐ போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டெஸ்ட்டில் 788 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 5411 ரன்கள், டி20களில் 4867 ரன்கள் என மொத்தமாக 11,066 ரன்களைக் குவித்துள்ளார் ஸ்மிருதி மந்தனா.
மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில், மந்தனாவைத் தொடர்ந்து முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் உள்ளார். மிதாலி 1999 முதல் 2022 ஆம் ஆண்டு வரை இந்தியாவுக்காக 333 போட்டிகளில் விளையாடி 10,868 ரன்கள் எடுத்துள்ளார்.
Summary
Smriti Mandhana entered her name in the history books on Tuesday (September 22) by becoming the first player in the world to score 11,000 runs in women’s international cricket matches.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






