ஐசிசி பந்துவீச்சு தரவரிசையில் புதிய சாதனை படைத்த ஸ்ரீ சரணி!
ஐசிசி டி20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி அதிக ரேட்டிங் புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி - படம் | பிசிசிஐ
ஐசிசி டி20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி அதிக ரேட்டிங் புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சு வீராங்கனைகளில் ஒருவரான ஸ்ரீ சரணி அண்மையில் நடைபெற்ற தொடர்களில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் ஐசிசி டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
இந்த நிலையில், ஐசிசி டி20 போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தவரிசையில் அதிக ரேட்டிங் புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலிய வீராங்கனை மேகன் ஷுட்டின் சாதனையை ஸ்ரீ சரணி முறியடித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய வீராங்கனை மேகன் ஷுட்டின் 806 ரேட்டிங் புள்ளிகளே டி20 போட்டிகளில் வீராங்கனை ஒருவர் பந்துவீச்சில் பெற்ற அதிகபட்ச புள்ளிகளாக இருந்து வந்தது. 817 ரேட்டிங் புள்ளிகள் பெற்று அந்த சாதனையை ஸ்ரீ சரணி முறியடித்துள்ளார்.
மகளிர் ஆசிய கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்காக ஸ்ரீ சரணி அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஆசிய கோப்பையில் அவர் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் அவர் அபாரமாக செயல்பட்டார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்ரீ சரணி வெறும் 10 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது.
Summary
Indian player Shree charani has set a new record by achieving the highest rating points in the ICC T20 bowling rankings.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







