பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

நம்பமுடியாத வெற்றியை அடைந்த பெல்ஜியம்: ஜப்பான் ரசிகர்கள் கண்ணீர்!

ஜப்பான் அணி இரு கோல்கள் அடித்தபின்பும் நம்பிக்கையுடன் விளையாடி மறக்கமுடியாத வெற்றியை..

News image
Updated On :3 ஜூலை 2018, 7:22 am

DIN

உலகக் கோப்பை போட்டிக்கு ஆசியாவில் இருந்து சவூதி அரேபியா, ஜப்பான், தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தகுதி பெற்றன. இவற்றில் ஜப்பான் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

குரூப் ஜி பிரிவில் முதலிடம் பெற்ற பெல்ஜியம் அணியுடன் ரோஸ்டோவ் மைதானத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மோதியது.

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. தரவரிசையில் ஜப்பானை விடவும் 58 இடங்கள் முன்னிலையில் இருக்கும் பெல்ஜியம் அணி இரண்டாவது பாதில் 0-2 என பின்தங்க வேண்டிய நிலைமை உருவானது. இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் ஜெங்கியும் டகாஷியும் தலா ஒரு கோல் அடித்து நம்பமுடியாத முன்னிலையை தங்கள் அணிக்குத் தந்தார்கள். இதனால் ஜப்பான் அணி காலிறுதிக்கு நிச்சயம் தகுதி பெறும் என்கிற நம்பிக்கை கால்பந்து ரசிகர்களுக்கு ஏற்பட்டது. 69வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் வெர்டொன்கென் கோல் அடித்து பெல்ஜியம் ரசிகர்களை ஆறுதல்படுத்தினார். தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை நிகழ்த்தியதால் 74-வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தது பெல்ஜியம். இதனால் நேரிலும் தொலைக்காட்சியிலும் இணையம் வழியாகவும் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் பரபரப்பு அடைந்தார்கள். ஆட்ட நேரம் முடிந்து கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் வெற்றி கோல் அடிக்கக் கூடுதலாக முயற்சி செய்தன. கடைசியில் பெல்ஜியத்தின் சாட்லி அட்டகாசமான கோல் அடித்து நம்பமுடியாத வெற்றியைத் தன் அணிக்கு ஏற்படுத்தினார். 

47’ #பெல்ஜியம் 0-1 #ஜப்பான் 
52’ #பெல்ஜியம் 0-2 #ஜப்பான் 
69’ #பெல்ஜிய 1-2 #ஜப்பான் 
74’ #பெல்ஜியம் 2-2 #ஜப்பான் 
94’ #பெல்ஜியம் 3-2 #ஜப்பான் 

1970-ல் ஜெர்மனி அணி இரு கோல்கள் பின்னடைவில் இருந்து கடைசியில் 3-2 என இங்கிலாந்தைத் தோற்கடித்தது. அதற்குப் பிறகு இப்போதுதான் ஓர் அணி இரு கோல்களைக் கொடுத்த பிறகும் மீண்டு வந்து வெற்றியடைந்துள்ளது. உலகக் கோப்பைப் போட்டியில் இதுபோல ஆறு தடவை மட்டுமே நடந்துள்ளது. பெல்ஜியத்தின் ஈடன் ஹஸார்ட் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

இந்த ஆட்டத்தில் 56% பந்தைத் தன் வசம் வைத்திருந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது பெல்ஜியம் அணி. ஜப்பான் அணி இரு கோல்கள் அடித்தபின்பும் நம்பிக்கையுடன் விளையாடி மறக்கமுடியாத வெற்றியை அடைந்துள்ளது. காலிறுதிக்குத் தகுதி பெற்று சாதனை படைக்கும் என்று நம்பிக்கை வைத்த ஜப்பான் ரசிகர்கள் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள். இருப்பினும் கடுமையாகப் போராடித் தோற்ற ஜப்பான் அணிக்குப் பலத்த பாராட்டுகள் கிடைத்துள்ளன.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.