ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஆடுகளத்தில் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதம்: தோனிக்கு அபராதம்!

ஐபிஎல் விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக தோனிக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 50% அபராதம் விதிக்கப்படுவதாக...

News image
Updated On :12 ஏப்ரல் 2019, 6:41 am

எழில்

ராஜஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை. முதலில் ஆடிய ராஜஸ்தான் 151/7 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய சென்னை அணி 155/6 ரன்களை எடுத்து வென்றது. கடைசிப் பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்ஸர் அடித்து சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார் ஆல்ரவுண்டர் சாண்ட்னர். 

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளது சென்னை அணி. பாதி ஆட்டங்களை விளையாடியுள்ள நிலையில் ஏழு ஆட்டங்களில் ஆறில் வென்று 12 புள்ளிகள் பெற்றுள்ளதால் சென்னை அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற இன்னும் 4 புள்ளிகள் எடுத்தால் போதும். இதனால் சென்னை அணி பிளேஆஃப்-புக்குச் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

நேற்றைய ஆட்டத்தில் கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ் பந்துவீசிய போது நோபால் வீசியதாக சர்ச்சை எழுந்தது. கடைசி ஓவரின் நான்காவது பந்தை கள நடுவர் நோ பால் என சைகையால் தெரிவித்தார். ஆனால் ஸ்கொயர் லெக் நடுவர் நோ பால் அல்ல என மறுத்தார். இதனால் நோ பால் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. எனினும் இதைக் கண்டு ஆவேசமான சென்னை கேப்டன் தோனி மைதானத்தின் உள்ளே சென்று நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். நோ பால் என அறிவித்தபிறகும் அதைத் திரும்பப் பெற்றது ஏன் என வாக்குவாதம் செய்தார். ஆனால் நடுவர்கள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தாதால் பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். இக்காட்சியை நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். எந்தச் சூழலிலும் நிதானமாக இருக்கும் தோனி, இதுபோல தன்னிஷ்டத்துக்கு ஆடுகளத்துக்குள் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதம் செய்ததை கிரிக்கெட் நிபுணர்களும் முன்னாள் வீரர்களும் விமரிசனம் செய்துள்ளார்கள்.

இந்நிலையில் ஐபிஎல் விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக தோனிக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 50% அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.