பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சொந்த மண்ணில் தொடர் தோல்விகள்: ரசிகர்களைச் சோதிக்கும் மூன்று அணிகள்!

சென்னை தான் வெகுசிறப்பாக சொந்த மண்ணில் இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது...

News image
Updated On :19 ஏப்ரல் 2019, 11:07 am

எழில்

தில்லிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அணி அபாரமாக ஆடி 40 ரன்களுடன் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய மும்பை 168/5 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய தில்லி 128/9 ரன்களை எடுத்து தோல்வியைத் தழுவியது.

தில்லி மைதானத்தில் இதுவரை விளையாடிய நான்கு ஆட்டங்களில் மூன்றில் தோல்வியடைந்துள்ளது தில்லி கேபிடல்ஸ் அணி. கோட்லா ஆடுகளத்தை தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் விமரிசனம் செய்தார். எதிரணிகளுக்கே அந்த ஆடுகளம் சாதகமாக இருப்பதாகக் கூறினார். ஜெயித்த ஓர் ஆட்டமும் டை ஆகி பிறகு சூப்பர் ஓவரில் வென்றது தில்லி அணி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஜெய்ப்பூரில் இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் 3-ல் தோற்றுள்ளது. 

ஆர்சிபி அணியின் நிலைமை இன்னும் மோசம். அந்த அணி பெங்களூரில் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் தோற்றுள்ளது. இதனால் உள்ளூர் ரசிகர்களை ஆர்சிபியும் தில்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மிகவும் சோதித்து வருகின்றன. உள்ளூர் அணி ஜெயிக்கும் என்று பெருந்திரளாக வரும் ரசிகர்கள் தொடர் தோல்விகளால் ஏமாற்றம் அடைகிறார்கள்.

இதில் சென்னை தான் வெகுசிறப்பாக சொந்த மண்ணில் இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக பஞ்சாப் அணி, 5 ஆட்டங்களில் 4-ல் வென்றுள்ளது. இந்த விதத்தில் சென்னை, பஞ்சாப் ரசிகர்கள் கொடுத்துவைத்தவர்கள்.

இந்த வருட ஐபிஎல் போட்டியில், சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் பெற்ற வெற்றிகள்

சென்னை - 4/4
பஞ்சாப் - 4/5
சன்ரைசர்ஸ் - 3/5
மும்பை - 3/5
கொல்கத்தா 2/4
ராஜஸ்தான் - 1/4
தில்லி - 1/4
பெங்களூர் - 0/3

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.