பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

நீக்கப்பட்ட கேப்டனுக்கு அணியில் வாய்ப்பு: உலகக் கோப்பைப் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

சமீபத்தில், ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கன், பதவியிலிருந்து நீக்கப்பட்டார்...

News image
Updated On :22 ஏப்ரல் 2019, 9:20 am

எழில்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கன், பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக குல்பாதின் நைப் ஒருநாள் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். 31 வயது அஸ்கர் ஆப்கன் கடந்த நான்கு வருடங்களாக ஆப்கானிஸ்தானின் டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளுக்கு கேப்டனாக இருந்தார். இந்நிலையில் அவருக்குப் பதிலாக புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்குப் பிரபல வீரர்கள் ரஷித் கான் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இருப்பினும், நைப் உலகக் கோப்பைக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜூன் 1 அன்று தனது முதல் ஆட்டத்தை விளையாடவுள்ளது ஆப்கானிஸ்தான் அணி. 

ஆப்கானிஸ்தான் அணி: குல்பாதின் நைப், முகமது சஷாத் (விக்கெட் கீப்பர்), நூர் அலி ஜத்ரான், ஹஸ்ரதுல்லா  ஸஸாய், ரஹமத் ஷா, அஸ்கர் ஆப்கன், ஹஸ்மதுல்லா ஷாகிதி, நஜிபுல்லா ஸத்ரான், சமியுல்லா ஷின்வாரி, முகமது நபி, ரஷித் கான், தவ்லத் ஸத்ரான், அப்தாப் ஆலம், ஹமித் ஹஸ்ஸான், முஜீப் உர் ரஹ்மான். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.