தொடர்ச்சியாக 6-வது தோல்வியைச் சந்தித்த கொல்கத்தா: ராஜஸ்தானுக்கு மறுவாழ்வு தரும் 17 வயது வீரர்!
இந்த இரு வெற்றிகளின் மூலம் புதிய மறுவாழ்வு கண்டுள்ளது ராஜஸ்தான் அணி...


தோல்வியின் விளிம்பில் இருந்த ராஜஸ்தான் அணி சிறப்பாக ஆடி 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில், முதலில் ஆடிய கொல்கத்தா 175/6 ரன்களை எடுத்த நிலையில், பின்னர் ஆடிய ராஜஸ்தான் 177/7 ரன்களைக் குவித்து வென்றது.
2 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 31 பந்துகளில் 47 ரன்களை விளாசி ரஸ்ஸல் பந்தில் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டானார் அஸ்ஸாமைச் சேர்ந்த 17 வயது ரியான் பராக். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 43 ரன்கள் எடுத்த பராக், அப்போதும் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவினார். இதனால் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டின் வழியாகவும் அணிக்குப் பங்களித்து வருகிறார் இளம் வீரர் பராக். இந்த இரு வெற்றிகளின் மூலம் புதிய மறுவாழ்வு கண்டுள்ளது ராஜஸ்தான் அணி.
இந்த வருட ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் நிலைமை திடீரென பரிதாபன நிலைமைக்குச் சென்றுவிட்டது. முதல் 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்று அனைவரும் அச்சப்படும் அணியாக இருந்தது கொல்கத்தா அணி. ஆனால், கடைசி 6 ஆட்டங்களில் அந்த அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. இதனால் புள்ளிகள் பட்டியலில் 8 புள்ளிகளுடன் 6-ம் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான், பெங்களூர் அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் முறையே 7-ம் மற்றும் 8-ம் இடங்களில் உள்ளன. இதனால் இந்த மூன்று அணிகளுக்கும் கடைசி 3 ஆட்டங்களும் முக்கியமாக உள்ளன. அந்த மூன்றில் ஒன்றில் தோற்றாலும் போட்டியிலிருந்து வெளியேறவேண்டியதுதான்.
சமீபகாலமாக தினேஷ் கார்த்தின் தலைமைப் பண்பு மிகவும் விமரிசிக்கப்படுகிறது. பேட்டிங்கிலும் அவர் நிறைய சொதப்பியுள்ளார். முதல் 10 ஆட்டங்களில் ஒரு அரை சதம் உள்பட 117 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 119.38.
ஆனால் நேற்று புதிய தினேஷ் கார்த்திக்கைப் பார்க்க முடிந்தது. 50 பந்துகளில் 9 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் அடித்தும் அவரால் அணியின் தோல்வியைத் தடுக்க முடியாமல் போனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...