ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அஸ்வின் கிரிக்கெட்டின் கண்ணியத்தை மீறிவிட்டார்: நிலைப்பாட்டைத் திடீரென மாற்றிக்கொண்ட எம்சிசி

அஸ்வின் பந்துவீசும் நிலைக்கு வந்தபோது பட்லரின் பேட் க்ரிஸுக்குள் தான் இருந்தது...

News image
Updated On :28 மார்ச் 2019, 11:05 am

எழில்

ஐபிஎல் போட்டி வரலாற்றில் மன்கட் முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் ஜாஸ் பட்லர் என்பதால் அது குறித்து அதிக சர்ச்சை உருவாகியுள்ளது. திங்கள் அன்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப். கிறிஸ் கெயில் அபாரமாக ஆடி 79 ரன்களை விளாசினார். முதலில் ஆடிய பஞ்சாப் 184/4 ரன்களையும், பின்னர் ஆடிய ராஜஸ்தான் 170/9 ரன்களையும் எடுத்தன. 

2 சிக்ஸர், 10 பவுண்டரியுடன் 43 பந்துகளில் 69 ரன்கள் விளாசிய ஜாஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்தார் அஸ்வின்.  அவர் பந்துவீச முயன்றபோது கிரிஸுக்கு வெளியே பட்லர் பேட்டை நகர்த்தியதால் சமயோசிதமாக மன்கட் செய்தார் அஸ்வின். எனினும் இதுபோல ஒரு பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்வது தவறு என ஷேன் வார்னே உள்பட பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இங்கிலாந்து வீரர்கள் பலரும் அஸ்வினுக்கு எதிராக  ட்வீட்களை வெளியிட்டுள்ளார்கள்.

சம்பவம் நடைபெற்றவுடன் அஸ்வினுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த, கிரிக்கெட் ஆட்டங்களுக்கு விதிமுறை பரிந்துரை செய்யும் எம்சிசி அமைப்பு தற்போது அதற்கு மாறுபாடான கருத்தைத் தெரிவித்துள்ளது. 

மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்த விவகாரத்தில் அஸ்வின் கிரிக்கெட் கண்ணியத்தை மீறிவிட்டார் என்று எம்சிசி கிரிக்கெட் அகாடமி மேலாளர் ஃபிரேசர் ஸ்டீவர்ட் தற்போது கூறியுள்ளார்.

க்ரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

மன்கட் முறையில் பட்லரை அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்த காணொளியை மீண்டும் ஆராய்ந்தோம். அஸ்வின் பந்துவீசும் நிலைக்கு வந்தபோது பட்லரின் பேட் க்ரிஸுக்குள் தான் இருந்தது. அஸ்வின் பந்துவீசி விடுவார் என்றுதான் பேட்ஸ்மேன் நினைக்ககூடும். ஆனால் அஸ்வின் பந்துவீசாமல் தன்னுடைய செய்கையை அப்படியே நிறுத்திவிட்டார். இதன்மூலம் பட்லர் கிரிஸுக்கு வெளியே செல்லும்வரை அஸ்வின் காத்திருந்தார். அதன்பிறகு அவர் ஸ்டம்ப்பை தட்டிவிட்டார். அஸ்வின் தனது பந்துவீசும் செய்கையை நீண்ட நேரம் நிறுத்தி வைத்தார். அப்படியே அதே வேகத்தில் தொடரவில்லை. எனவே இது கிரிக்கெட் கண்ணியத்துக்கு எதிரானதாகக் கருதுகிறோம். பந்துவீசுவதை அவர் தாமதப்படுத்தியதால் தான் பட்லர் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அஸ்வினின் புஜம் மேலே முழுவதுமாகச் செல்லவில்லை. முதல்முறை மன்கட் முறையில் ஆட்டமிழந்தபோது பட்லர் வெளியே சென்றுவிட்டார். ஆனால் இந்தமுறை அவர் முன்பே கிரீஸை விட்டுச் செல்லவில்லை. 

இதிலிருந்து பேட்ஸ்மேன்களுக்குச் சொல்லிக்கொள்வது, பந்துவீச்சாளர் பந்தை வீசி முடிக்கும்முன்பு கிரீஸை விட்டு வெளியே வரவேண்டாம். இதுபோல ஆட்டமிழப்புகள் தேவையில்லை. அதேபோல பந்துவீச்சாளரும் பேட்ஸ்மேன் க்ரீஸை விட்டு வெளியேறும்வரை பந்துவீசும் முறையைத் தாமதப்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.