ஃபானி புயல் போனாலும், தோனி புயல் வீசியது: தல, சின்ன தல அதிரடியில் சிஎஸ்கே சிறப்பு!

2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 50-ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது.
ஃபானி புயல் போனாலும், தோனி புயல் வீசியது: தல, சின்ன தல அதிரடியில் சிஎஸ்கே சிறப்பு!
Updated on
1 min read

2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 50-ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 8 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 59 ரன்கள் விளாசினார். 

கேப்டன் தோனி 3 இமாலய சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 44* ரன்கள் விளாசினார். டூ பிளெஸிஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 39 ரன்களும், ஜடேஜா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 25 ரன்களும் சேர்த்தனர். 

தில்லி கேபிடல்ஸ் தரப்பில் சுசித் 2 விக்கெட்டுகளும், மோரிஸ் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com