கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

சிஎஸ்கேவின் அமர்க்களமான வெற்றியை முன்கூட்டியே கணித்த ஷேன் வாட்சன்

முதல் ஆட்டத்தில் கண்ட வெற்றிக்குப் பிறகு தொடா்ந்து 3 தோல்விகளை சந்தித்த சென்னை அணி...

News image
Updated On :5 அக்டோபர் 2020, 9:53 am

DIN

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பா் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

துபையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை 17.4 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடித்து வென்றது. ஷேன் வாட்சன் - டு பிளெசிஸ் கூட்டணி அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தது.

முதல் ஆட்டத்தில் கண்ட வெற்றிக்குப் பிறகு தொடா்ந்து 3 தோல்விகளை சந்தித்த சென்னை அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டு மீண்டுள்ளது. ஷேன் வாட்சன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டாா். இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது சிஎஸ்கே அணி.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்துக்கு முன்பு மோசமாக விளையாடி வந்த ஷேன் வாட்சன், பஞ்சாப் அணிக்கு எதிரான வெற்றியை முன்கூட்டியே கணித்துள்ளார். ஆட்டத்துக்கு முன்பு ட்விட்டரில் ஷேன் வாட்சன் கூறியதாவது:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான அருமையான ஆட்டம் வரவுள்ளது என்றார். 

வாட்சன் சொன்னது போலவே சிஎஸ்கே அணிக்கு அருமையான வெற்றி கிடைத்தது. இதையடுத்து வாட்சனின் ட்வீட்டைப் பலரும் ரீட்வீட் செய்துள்ளார்கள். நேற்றைய ஆட்டத்தில் வாட்சன் 83 ரன்கள் எடுத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.