தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கொல்கத்தா அணியில் மீண்டும் சுனில் நரைன்: தில்லி அணிக்கு எதிராக முதலில் பேட்டிங்!

இரு வாரங்களுக்கு முன்பு பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா ஆல்ரவுண்டர் சுனில் நரைனின் பந்துவீச்சு குறித்து...

News image
Updated On :24 அக்டோபர் 2020, 11:48 am

DIN

தில்லி அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் தில்லி கேபிடல்ஸ் அணி 2-ம் இடத்திலும் கொல்கத்தா அணி 4-ம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில் அபு தாபியில் நடைபெறும் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன.

டாஸ் வென்ற தில்லி அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். நோர்கியோ, ரஹானா ஆகியோர் சாம்ஸ், பிரித்வி ஷாவுக்குப் பதிலாக தில்லி அணியில் இடம்பெற்றுள்ளார்கள். கொல்கத்தா அணியில் சுனில் நரைன் மீண்டும் இடம்பிடித்துள்ளார். குல்தீப் யாதவுக்குப் பதிலாக நாகர்கோட்டி விளையாடுகிறார். 

இரு வாரங்களுக்கு முன்பு பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா ஆல்ரவுண்டர் சுனில் நரைனின் பந்துவீச்சு குறித்து நடுவர்கள் புகார் அளித்தார்கள். இந்த ஆட்டத்தில் சுனில் நரைன் பந்துவீசியபோது அவருடைய முழங்கை ஐசிசியால் அனுமதிக்கப்பட்ட அளவான 15 டிகிரிக்கு மேல் வளைவது கண்டறியப்பட்டது. இதனால் நரைனுக்கு ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது. விதிகளை மீறும் விதத்தில் அவருடைய பந்துவீச்சு ஆக்‌ஷன் மீண்டும் அமைந்தால் இடைக்காலத் தடை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. பரிசோதனைக்குப் பிறகு நரைனின் பந்துவீச்சுக்கு ஐபிஎல் நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து இன்றைய ஆட்டத்தில் அவர் இடம்பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.