எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திரும்ப வந்துவிட்டார் ரெய்னா: டெல்லிக்கு எதிராக அரைசதம்

டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா அரைசதம் அடித்து நம்பிக்கையளித்து வருகிறார்.

News image
கோப்புப்படம்
Updated On :10 ஏப்ரல் 2021, 3:13 pm

DIN


டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா அரைசதம் அடித்து நம்பிக்கையளித்து வருகிறார்.

சுரேஷ் ரெய்னா 698 நாள்களுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இன்று (சனிக்கிழமை) களமிறங்கினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய ரெய்னா ஏமாற்றமளிக்காமல் ரசிகர்களுக்கு அதிரடி விருந்தை அளித்துள்ளார்.

முதல் பேட்டிங் வரும் சென்னை அணிக்கு, 2-வது ஓவரிலேயே சிக்கல் ஏற்பட்டது. பாப் டு பிளெஸ்ஸி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அப்போது ரெய்னா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மொயீன் அலி களமிறக்கப்பட்டார். அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்க ரெய்னா களமிறங்கினார்.

அதே ஓவரில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார் ரெய்னா. அடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்து அதிரடிக்கு கியரை மாற்றினார்.

அஸ்வின் ஓவரில் 1 சிக்ஸர், அமித் மிஸ்ரா ஓவரில் 2 சிக்ஸர்கள் என விளாச சென்னை அணியின் ரன் ரேட் உயர்ந்தது. தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் பந்தில் சிக்ஸரைப் பறக்கவிட்ட ரெய்னா 32-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

சற்று முன்பு வரை சென்னை அணி 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.